vindhan.jpg

// காதல் கதைகள்

மறுமணம்

- விந்தன்
[No Comment]

அவள் போய் விட்டாள் ‍ எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, [...]

  • Share/Bookmark
vannadasan.jpg

// நாட்டுடைமை

கிருஷ்ணன் வைத்த வீடு

- வண்ணதாசன்
[One Comment]

கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன். பாப்புலர் டாக்கீஸில் 'தாமரை நெஞ்சம் ' படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் [...]

  • Share/Bookmark
miserman.jpg

// சிறுவர் கதைகள்

ஆ ! அய்யோ !

- ஜி. சச்சிதாநந்தம்
[No Comment]

முன்னொரு காலத்தில் மிகப்பெரிய செல்வன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். வேலையாட்களை வருத்தி வேலை வாங்குவான். ஆனால் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவான்.  செல்வன் மாதத் தொடக்கத்தில் வேலையாளை அமர்த்துவான். பெரியத்தொகையை சம்பளமாகக் கொடுப்பதாக சொல்லுவான். வேலையாள் மகிழ்ச்சியாக வேலையில் சேருவான். மாத இறுதி வரை  கடுமையாக உழைப்பான். மாதக் கடைசி நாளன்று செல்வன் வேலையாளை அழைத்து கொஞ்சம் பணம் கொடுப்பான். ''கடைக்குப் போய் ''ஆ'' ''அய்யோ'' வாங்கி வா … வாங்கி வராவிட்டால் உனக்குச் சம்பளம் [...]

  • Share/Bookmark

// மொழிபெயர்ப்பு

கதீட்ரல்: ரேமண்ட் கார்வெர்
- ஜி குப்புசாமி
[No Comment]

தமிழில்: ஜி குப்புசாமி என் மனைவியின் பழைய நண்பனான இந்தக் குருடன் எங்கள் வீட்டில் தங்குவதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் மனைவி இறந்துவிட்டாளாம். அதனால் கனெக்டிகட்டில் இறந்து போன மனைவியின் உறவினர்களைச் சென்று சந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மாமனார் வீட்டிலிருந்து என் மனைவியிடம் பேசினான். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவன் ஒரு ஐந்துமணிநேர ரயில் பயணத்தில் வரப்போகிறான். என் மனைவி ஸ்டேஷனுக்குச் சென்று அழைத்து வருவாள். பத்து வருடங்களுக்கு முன்பு சியாட்டிலில் ஒரு கோடைப்பருவத்தில் அவனிடம் பணியாற்றியதற்குப்பிறகு அவனை [...]

  • Share/Bookmark

// சிறுகதைப் போட்டி

புலன்வெளி ஒலிகள்
- ரா.கிரிதரன்
[No Comment]

- ரா.கிரிதரன் சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என் காலடி சத்தத்தின் இடையே உருவான நிசப்தம் பயத்தை உண்டாக்கியது. இப்போது பைத்தியங்கள் , குடிகாரர்கள் இவர்களை மட்டுமே இத்தெரு எதிர்ப்பார்த்திருக்கும். சமயத்தில் என்னைப்போல் வீடுள்ளவர்களுக்கும் அனுமதியுண்டு. சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் – `உங்களுக்கு நாலு தலை` – ஜெயந்தி நீண்ட நேர மெளனத்தை நிரப்பினாள். அரைமணி நேரமாய் எதுவும் பேசாமல் [...]

  • Share/Bookmark

//

எரிமலை வாசல் பூ
- என்.சொக்கன்
[No Comment]

உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, 'ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?' என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை. 'ஸ்பீக்கிங்' என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ? அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, 'வணக்கம் சார், என்னை உங்களுக்கு [...]

  • Share/Bookmark