கதீட்ரல்: ரேமண்ட் கார்வெர்
- ஜி குப்புசாமி | September 15, 2009 · Leave a Comment
தமிழில்: ஜி குப்புசாமி என் மனைவியின் பழைய நண்பனான இந்தக் குருடன் எங்கள் வீட்டில் தங்குவதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் மனைவி இறந்துவிட்டாளாம். அதனால் கனெக்டிகட்டில் இறந்து போன மனைவியின் உறவினர்களைச் சென்று சந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மாமனார் வீட்டிலிருந்து என் மனைவியிடம் பேசினான். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவன் ஒரு ஐந்துமணிநேர ரயில் பயணத்தில் வரப்போகிறான். என் மனைவி ஸ்டேஷனுக்குச் சென்று அழைத்து வருவாள். பத்து வருடங்களுக்கு முன்பு சியாட்டிலில் ஒரு கோடைப்பருவத்தில் அவனிடம் பணியாற்றியதற்குப்பிறகு அவனை [...]
Filed under கதைகள், மொழிபெயர்ப்பு · Tagged with G Kuppusami, Kuppusamy, raymond carver, Translations, Uyirmai, Uyirmmai, ஜி குப்புசாமி, ரேமண்ட் கார்வெர்
மாஷ்கா – மாக்ஸிம் கார்க்கி
- மாக்ஸிம் கார்க்கி | September 9, 2009 · 1 Comment
தமிழில்: சுரா ஒரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன். ஒரு பெரிய சேற்றுக் குவியலுக்கு நடுவில் ஒரு பெண் நின்று கொண் டிருந்தாள். சிறு குழந்தை களைப்போல அவள் தன்னு டைய கால்களால் சேற்றை யும் நீரையும் மிதித்துத் தெறிக்கச் செய்து கொண்டி ருந்தாள். சேற்று நீரைத் தெறிக்கச் செய்ததுடன், மூக்கைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் போன்ற குரலில் ஏதோ ஒரு மோசமான பாடலை [...]
Filed under கதைகள், மொழிபெயர்ப்பு · Tagged with Iniya Uthayam, maxim gorky, SuRa
பழைய ஒரு சிறிய காதல் கதை
- வைக்கம் முஹம்மது பஷீர் | September 9, 2009 · 7 Comments
வைக்கம் முஹம்மது பஷீர் தமிழில் : சுரா இனிய உதயம் காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்! பசித்துப் பசித்து [...]
Filed under கதைகள், மொழிபெயர்ப்பு · Tagged with Iniya Uthayam, Kerala, Malayalam, Nakeeran, SuRa, Translations, Vaikkom Muhammad Basheer
உத்தரவிடு பணிகிறேன் :: ஆல்பர்ட்டோ மொராவியா
- நாகூர் ரூமி | August 27, 2009 · Leave a Comment
அரும்பு, செப்டம்பர், 1985.
ஆல்பர்ட்டொ மொராவியா பற்றிய குறிப்பு
ஆல்பர்ட்டோ மொராவியா (1907 – 1990 )என்ற பெயரில் எழுதிய ஆல்பர்ட்டொ பின்ஷெல் ஒரு இத்தாலிய எழுத்தாளர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் ஒரு முக்கியமான இத்தாலிய இலக்கிய ஆளுமையாக அவர் இருந்தார். எட்டு வயதில் ஒருவிதமான எலும்பு காச நோயால் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக படுக்கையிலே கழித்த ஆண்டுகளில் ஃப்ரென்ச், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று பல எழுத்தாளர்களைப் படித்தார். தனிமை, விரக்தி போன்ற மனோ நிலைகளை அவருடைய எழுத்து ரொம்ப அற்புதமாக வெளிப்படுத்தியது.
Filed under கதைகள், மொழிபெயர்ப்பு · Tagged with Nagore Rumi, Translations, நாகூர் ரூமி