எரிமலை வாசல் பூ
- என்.சொக்கன் | November 29, 2009 · 29 Comments
உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, 'ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?' என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை. 'ஸ்பீக்கிங்' என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ? அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, 'வணக்கம் சார், என்னை உங்களுக்கு [...]
Filed under ஒரு பக்க கதைகள், கதைகள் · Tagged with என்.சொக்கன், எரிமலை, தாமரை
அவன் மட்டும் இல்லாதிருந்தால்?
- ரிஷபன் | November 2, 2009 · 9 Comments
கதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று. சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள். என்னைப் பார்த்ததும் திகைப்பு. "உள்ளே வரலாமா" "வா..ங்க" சுதாரித்துக் கொண்டு அழைத்தாள். உள்ளே புழுக்கம் இன்னும் அதிகமாய்த் தெரிந்தது. "தினு ஸ்கூலுக்குப் போயிருக்கானா" தலையசைத்தாள். கூடவே குழப்பமும். நான் ஏன் இந்த வேளையில் வந்திருக்கிறேன் என்று. "எதுவும் சாப்பிடுகிறீர்களா" அவளை நேராகப் பார்த்தேன். 'நீ போ.. நீ போ' என்று கடைசியில் என்னைப் பிடித்துத் தள்ளி [...]
Filed under ஒரு பக்க கதைகள், கதைகள் · Tagged with Nilacharal, யதார்த்தம்
சாமரங்கள்
- விமலா ரமணி | November 2, 2009 · 2 Comments
‘தந்தி’ என்றதும் பகீர் என்றது பட்டுவுக்கு. தந்தியா? எனக்கா? யார் கொடுத்திருப்பார்கள்? என் விலாசம் யாருக்குத் தெரியும்? இவளை ஒதுக்கிய உறவுகளை விட்டு இவளே ஒதுங்கி வந்து அஞ்ஞாதவாசம் ஆரம்பித்து இருபது வருடங்களுக்கு மேலாகின்றன. இவள் எதற்காக யாருக்காகக் காத்திருக்கிறாள்? இவளின் ஒரே காத்திருப்பு, மரணம் ஒன்றுதான்! அது வருகிறபோது வரட்டும். அதற்காக ஆரத்தி எடுக்கவா முடியும்? எதுவாக இருந்தாலும் ‘சட்’டென்று மரணம் வந்துவிடவேண்டும்! சீரழியக்கூடாது! இவளுக்கு உதவ யாருமில்லை! இன்று பாட்டு டீச்சர் என்றால் அத்தனை [...]
Filed under ஒரு பக்க கதைகள், கதைகள் · Tagged with சாமரங்கள்
காதல்
- சத்யராஜ்குமார் | September 12, 2009 · 74 Comments
அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு. ” ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான். “ ஏட்டிடம், ” இவன் பாக்கெட்டை சோதனை போடு. ” என்றார் இன்ஸ்பெக்டர். சர்ட் பாக்கெட்டில் ரொனால்ட்ஸ் பேனா. பல்லவன் பஸ் டிக்கட். கசங்கிப் போன ஓர் இன்லேண்ட் லெட்டர். அழகான நெளிவுகளோடு நீல இங்க் எழுத்துக்கள். ” லெட்டரைப் படி. “ ” அன்புள்ள [...]
Filed under ஒரு பக்க கதைகள், கதைகள், காதல் கதைகள் · Tagged with காதல், குமுதம்
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே
- ஆர். பி. சாரதி | August 28, 2009 · 24 Comments
“அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .” குழந்தை மாயா சொல்ல வந்த போது. .. அம்மாவுக்கு சமையல் வேலை, அப்பா பேப்பரில் பிசி, அக்காவுக்கு நாவல் சுவாரசியம் கடைசியில் டெலிபோன் வந்தபோது.. . ஸ்கூலில் என்னதான் நடந்தது ? குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர். முத்து முத்தாக முகத்தில் வியர்வை தளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலை முடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா. அவள் பின்னால் வந்து புடவையைப் பிடித்தபடி நின்றாள் மாயா. புனிதா [...]
Filed under ஒரு பக்க கதைகள், கதைகள் · Tagged with சாரதி, தமிழோவியம்