புலன்வெளி ஒலிகள்
- ரா.கிரிதரன் | September 28, 2009 · 1 Comment
- ரா.கிரிதரன் சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என் காலடி சத்தத்தின் இடையே உருவான நிசப்தம் பயத்தை உண்டாக்கியது. இப்போது பைத்தியங்கள் , குடிகாரர்கள் இவர்களை மட்டுமே இத்தெரு எதிர்ப்பார்த்திருக்கும். சமயத்தில் என்னைப்போல் வீடுள்ளவர்களுக்கும் அனுமதியுண்டு. சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் – `உங்களுக்கு நாலு தலை` – ஜெயந்தி நீண்ட நேர மெளனத்தை நிரப்பினாள். அரைமணி நேரமாய் எதுவும் பேசாமல் [...]
Filed under கதைகள், சிறுகதைப் போட்டி · Tagged with சிறுகதை, போட்டிக் கதை
சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும்
- சுரேஷ்குமார இந்திரஜித் | September 25, 2009 · Leave a Comment
சுரேஷ்குமார இந்திரஜித் :: திண்ணை – மறைந்து திரியும் கிழவன், சிறுகதைத் தொகுப்பு 1993 நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக [...]
Filed under கதைகள் · Tagged with Sureshkumara Indrajith, சுரேஷ்குமார இந்திரஜித், திண்ணை, மறைந்து திரியும் கிழவன்
தோணியும் அந்தோணியும்
- சைதன்யா | September 25, 2009 · Leave a Comment
சைதன்யா – திண்ணை :: ஏப்ரல் 2- 2003 இந்தியா டுடே வார இதழில் வெளியான கதை அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன. விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்தில் இருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணிபோலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலிபோல் சிறுபடகு. கூட மைக்கேல். நாங்கள் பேசிக்கொள்ள எதுவும் இல்லாமல் கிடந்தோம். எங்கள் உள்மெளனங்கள் ஒன்றையொன்று தழுவிக் கிடந்தன. பேசி அந்தக் கணத்தைக் கொச்சைப்படுத்திவிட வேண்டாமாய் [...]
Filed under கதைகள் · Tagged with Chaidanya, Chaidhanya, Chaithanya, India Today, IT, Saithanya, Thinnai, இந்தியா டுடே, சைதன்யா, திண்ணை
ஊமைச்செந்நாய்
- ஜெயமோகன் | September 24, 2009 · 1 Comment
யானைத்துப்பாக்கியை தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக்கொண்டு துரை என்னைப்பார்த்து கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்கு கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்கு கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்கு கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்து கொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நான் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். சைகைமூலம் [...]
நதிக்கரையில்
- ஜெயமோகன் | September 24, 2009 · Leave a Comment
எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர நிழல்களில் பெரிய அண்டாக்களில் சூதர்கள் சமையல் செய்துகொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளிப் பாறை மீது அமர்ந்தவனாக பீமன் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். “மகாபலரே உப்புப் பாருங்கள்” என்று ஒருவன் வந்து மர அகப்பையில் சித்ரான்னத்தை நீட்டினான். பீமன் நாசியை விடைத்து அந்த ஆவியை முகர்ந்தான்.”சரிதான் நீர்வள்ளிக்கிழங்கு [...]
Filed under கதைகள், பாரத கதைகள் · Tagged with Jeya Mohan, Jeyamogan, Jeyamohan, Mahabharatha Story, Mahabharatham, ஜெயமோகன், பாரத கதைகள்
அகலிகை
- ஸ்ரீதர் நாராயணன் | September 24, 2009 · Leave a Comment
அந்த மழை நாள் காலையில் ஈரத்தலைமுடியை காய வைக்கக்கூட நேரமில்லாமல் வேர்க்க விறுவிறுக்க பயிலரங்குக்குள் நான் நுழைந்த பொழுது கிருபாநிதி வகுப்பை துவங்கியிருந்தார். புரஜக்டரின் ஒளி வெள்ளத்தில் திரையில் பவர்பாயிண்ட் ஸ்லைடுகள் பரப்பப்பட்டிருக்க அரங்கு முழுவதும் அரையிருட்டில் புன்னகைகள் தெரிந்தன. ’ஹ! இதோ சுபா வந்துவிட்டார்கள். இன்று முழுவதும் ஆண்களோடு மட்டும்தான் மாரடிக்க வேண்டுமென்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்’ ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் சாஃப்ட் ஸ்கில் பயிற்சி வகுப்பு அது. இரண்டு [...]
Filed under கதைகள் · Tagged with அகலிகை, ஒன் நைட் ஸ்டேண்ட், கற்பு, காதல், குடும்பம், சலனம், சுபா, சுப்புலக்ஷ்மி, ஸ்ரீதர் நாராயணன்
குரு பெயர்ச்சி
- | September 24, 2009 · Leave a Comment
காஃபி மேக்கரில் கோப்பையை நிறைக்கும்போது ஃப்ளாஸ்ஸி பின்னாலிருந்து முழங்கையை சுரண்டினாள். ‘எப்படிப் போயிட்டிருக்கு ரோசெஸ்டர் பிராஜெக்ட்?’ இன்றைய தேதியில் கம்பெனி முழுவதும் இந்த பிராஜெக்டைப் பற்றித்தான் பேச்சு. மின்னசோட்டா அரசின் சிவப்பு நாடா பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சம் புலம்பிவிட்டு வெண்டைக்காய் வழவழப்போடு ‘50-50 சான்ஸில் ப்ராஜெக்டை வென்று விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். மேசை மேல் டிரேக் (Drek) ’Product Manager – Rochester Project’ என்ற குறிப்போடு கூடவே ’இராமநாதன் தணிகாசலம்’ தலைப்போடு ரெஸ்யூம் ஒன்றையும் [...]
Filed under கதைகள் · Tagged with ஆப்பு, இராமநாதன், குரு, குரு பெயர்ச்சி, சிறுகதை, நம்பி்க்கை, பொது, ஸ்ரீதர் நாராயணன்
உலக முடிவு வரை – தாமஸ் ஜோசப்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 3 Comments
சாரு நிவேதிதா குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை பாரீசிலுள்ள சார்ள்ஸ் டி கால் விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பினார்கள்.இதற்குப் பிறகு சில வருடங்கள் கடந்து போயின.அவனுடைய சூட்கேஸ் பழையதாகிப் பிய்ந்தது.எல்லா இரவுகளிலும் முதலாவது டெர்மினலிருக்கும் தளத்தில் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பெஞ்சில் அவன் தூங்குகிறான்.வினோதச் [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Ernakulam, Gadai, Gadhai, Gathai, Josef, Josep, Joseph, Kadai, Kadhai, Katha, kathai, Kodungalloor, Kodungallur, Nivethita, Saaru, Saru, Thomas, Thomas Joseph, உயிரோசை, சாரு நிவேதிதா, தாமஸ் ஜோசப்
கையருகே ஆகாயம்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 2 Comments
தினமலர் – வாரமலர் :: சாரு நிவேதிதா ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார். எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Dhinamalar, Dinamalar, Gadai, Gadhai, Gathai, Kadai, Kadhai, kathai, Nivethita, Saaru, Saru, Storymalar, Thinamalar, Uyirmai, Uyirmmai, Uyirosai, Vaaramalar, Varamalar, உயிரோசை, சாரு நிவேதிதா
என் முதல் ஆங்கிலக் கடிதம்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 1 Comment
தினமலர் – கதை மலர் ( செப்டம்பர் 1993 ) :: சாரு நிவேதிதா பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் அவன் என்னை அழைத்திருந்ததால் நானும் அதில் பங்கு [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Dhinamalar, Dinamalar, Gadai, Gadhai, Gathai, Kadai, Kadhai, kathai, Nivethita, Saaru, Saru, Storymalar, Thinamalar, Uyirmai, Uyirmmai, Uyirosai, உயிரோசை, சாரு நிவேதிதா