பிழை திருத்துபவரின் மனைவி
- எஸ். ராமகிருஷ்ணன் | September 22, 2009 · 2 Comments
அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை. காகிதங்கள் கிழிக்கபடும் போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் [...]
Filed under கதைகள் · Tagged with Classics, Fiction, Magazines, S Ramakrisnan, Uyirmai, Uyirmmai, Zines, உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன்
உள்வரம்பு: இந்திரஜித்
- இந்திரஜித் | September 15, 2009 · Leave a Comment
உயிர்மை குமாருக்கு இது பிடித்திருக்கிறது. வீடு என்றால் முதலில் லிப்ட் இருக்க வேண்டும். லிப்ட்டில் போகும் போது யாரும் கூட வராமல் தனியாகப் போக வேண்டும். கூட ஒரு ஆள் வந்தால் அவர் மூச்சு விடுவார். தனிமை உடையும். தலைகுனிந்து நிற்க வேண்டும். நிமிர்ந்து பார்த்தால் அந்த முகத்தில் ஆயிரம் உலகம் விரியும். எப்போதாவது அபூர்வமாக ஒருவர் புன்னகை செய்வார். அவருக்கு மனநோயோ என்று நமக்குப் பயம் வரும். பிறகு அந்தச் சிரிப்பை வைத்து நாம் ஆராய்ந்து [...]
Filed under கதைகள் · Tagged with Indrajith, Inthirajit, Uyirmmai, இந்திரஜித், உயிர்மை
சுவர்ப்பேய்: யுவன் சந்திரசேகர்
- யுவன் சந்திரசேகர் | September 15, 2009 · Leave a Comment
உயிர்மை வேலையில் சேர்ந்த முதல்நாள் சாயங்காலம் இனம் புரியாத வெறுமை மனமெங்கும் நிறைந்திருந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் காத்திருந்த நாட்களில் என் மனத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நாடித்துடிப்பு மாதிரி நிறைந்திருந்த நாள் நிஜமாகவே வந்து கடந்த பிறகு ஒருவித வெற்றிடம் உருவாகிவிட்டது. அதில் வேறு கற்பனைகளை இனிமேல்தான் நிரப்பியாக வேண்டும். வங்கிக் கட்டடத்தின் எதிர்மருங்கில் இருந்த தேநீர்க்கடையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தனிமையும், யாருக்காகவும் ஒளிந்து குடிக்க அவசியமற்று என் கையில் [...]
Filed under கதைகள் · Tagged with Uyirmai, Uyirmmai, Yuvan, Yuvan Chandrasekar, உயிர்மை, யுவன் சந்திரசேகர்
லூசியா: அ.முத்துலிங்கம்
- அ.முத்துலிங்கம் | September 15, 2009 · 1 Comment
உயிர்மை அவன் ஆற்றிலே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய கறுப்பு அடிமைச் சிறுவன் ஓடோடி வந்தான். ஓடிவந்த வேகத்தில் அவனுடைய மூச்சு மேலும் கீழுமாக இழுத்தது. ‘என்ன என்ன?’ என்று கேட்டான் எசமான். ‘அந்தக் கிழவன் உங்களுடன் பேசவேண்டுமென்று எனக்குச் சைகைமூலம் சொன்னான். அவனிடம் ஒரு கறுப்பு அட்டை புத்தகம் இருக்கிறது. அது பைபிள்தான்’ என்றான் சிறுவன். ‘உனக்கு எப்படி அது பைபிள் என்பது தெரியும்?’ அதற்கு அடிமை ‘எனக்குத் தெரியும் எசமான். என்னுடைய முந்தைய எசமானிடம் [...]
Filed under கதைகள் · Tagged with Amuttu, Muthulingam, Muttulingam, அ முத்துலிங்கம், உயிர்மை
குட்டிப்பிசாசு: வா.மு. கோமு
- வா.மு. கோமு | September 15, 2009 · 1 Comment
உயிர்மை கீதா விஜயமங்கலம் பஸ் நிறுத்தத் தில் நின்றிருந்தாள். சுந்தர் திருப்பூரி லிருந்து கே.கே.சி பஸ்ஸில் தான் வருவதாகக் கூறியிருந்தான். ஆனால் இப்போதுதான் இவள் கைப்பேசிக்கு அழைத்து பஸ் ஸ்டாண்டில் கே.கே.சி நிற்கிறது என்றும் இன்னமும் வண்டியை எடுக்கவில்லை என்றும் கூறியிருந் தான். இருவரும் பெருந்துறை தேவி சித்ரா திரையரங்கில் வடிவேலின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பார்ப்பதாகத் திட்டம் போட்டிருந் தார்கள். கீதா நேற்று முன் தினம்தான் ரவியுடன் அந்தப் படத்தை மதியக் காட்சி பார்த்திருந்தாள். அந்தப் [...]
Filed under கதைகள் · Tagged with Uyirmai, Va Mu Komu, Vaa Mu Gomu, உயிர்மை, வா.மு. கோமு