மந்திரக் குவலை
- ஜி. சச்சிதாநந்தம் | December 27, 2010 · 21 Comments
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவலையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் [...]
Filed under சிறுவர் கதைகள் · Tagged with சிறுகதை, சிறுவர் கதைகள், தேவதை, மந்திரம், ராஜா
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
- ரா.கிரிதரன் | December 18, 2009 · 3 Comments
இது ஆலிவர் மெஸ்ஸையன் (Olivier Messiaen) ஜெர்மன் சிறையில் எழுதிய Quartet for the end of time என்ற இசைத் தொகுப்பை மையமாகக் கொண்டு எழுதிய சிறுகதை * இடம்: ஸ்டாலாக்-8, ஜெர்மனி, சிறை எண்: 26. 1942 ஜனவரி மாத இரவு. அந்த நீளமான அறையில் பொதி மூட்டைகள் போல மக்கள் கூட்டமாய் படுத்துக்கொண்டிருந்தனர். கனத்த திரைச் சீலைகளுக்கு மேல் விளக்குகள் காற்றில் ஆடியபடி வெளிச்சத்தை சீராக செலுத்த முயற்சி செய்துகொண்டிருந்தன. இருளும் வெளிச்சமும் [...]
Filed under கதைகள், நவீன இலக்கியம் · Tagged with Olivier Messiaen, உண்மைப் புனைவு, சிறுகதை, மேற்கிசைப் புனைவு
புலன்வெளி ஒலிகள்
- ரா.கிரிதரன் | September 28, 2009 · 1 Comment
- ரா.கிரிதரன் சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என் காலடி சத்தத்தின் இடையே உருவான நிசப்தம் பயத்தை உண்டாக்கியது. இப்போது பைத்தியங்கள் , குடிகாரர்கள் இவர்களை மட்டுமே இத்தெரு எதிர்ப்பார்த்திருக்கும். சமயத்தில் என்னைப்போல் வீடுள்ளவர்களுக்கும் அனுமதியுண்டு. சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் – `உங்களுக்கு நாலு தலை` – ஜெயந்தி நீண்ட நேர மெளனத்தை நிரப்பினாள். அரைமணி நேரமாய் எதுவும் பேசாமல் [...]
Filed under கதைகள், சிறுகதைப் போட்டி · Tagged with சிறுகதை, போட்டிக் கதை
குரு பெயர்ச்சி
- | September 24, 2009 · Leave a Comment
காஃபி மேக்கரில் கோப்பையை நிறைக்கும்போது ஃப்ளாஸ்ஸி பின்னாலிருந்து முழங்கையை சுரண்டினாள். ‘எப்படிப் போயிட்டிருக்கு ரோசெஸ்டர் பிராஜெக்ட்?’ இன்றைய தேதியில் கம்பெனி முழுவதும் இந்த பிராஜெக்டைப் பற்றித்தான் பேச்சு. மின்னசோட்டா அரசின் சிவப்பு நாடா பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சம் புலம்பிவிட்டு வெண்டைக்காய் வழவழப்போடு ‘50-50 சான்ஸில் ப்ராஜெக்டை வென்று விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். மேசை மேல் டிரேக் (Drek) ’Product Manager – Rochester Project’ என்ற குறிப்போடு கூடவே ’இராமநாதன் தணிகாசலம்’ தலைப்போடு ரெஸ்யூம் ஒன்றையும் [...]
Filed under கதைகள் · Tagged with ஆப்பு, இராமநாதன், குரு, குரு பெயர்ச்சி, சிறுகதை, நம்பி்க்கை, பொது, ஸ்ரீதர் நாராயணன்
ஹசர் தினார்
- எஸ். ராமகிருஷ்ணன் | September 22, 2009 · 1 Comment
காலம் இதழில் வெளியான சிறுகதை அவனுக்குப் பெயர் கிடையாது.அவனை விலைக்கு வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவனது பெயர் மாறிக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவனை விலைக்கு வாங்கிய வணிகன் ஆயிரம் தினார் விலை கொடுத்து வாங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனை ஹசர் தினார் என்று அழைக்கத் துவங்கினார்கள். அந்த வணிகனிடம் அவனைப் போல இருபதுக்கும் மேற்பட்ட இளவயது ஆண்களிருந்தார்கள்.தேசம் முழுவதுமே ஆண் மோகம் கொண்டவர்கள் அதிகமாகியிருந்தார்கள்.அழகான பெண்களை அடைவதை விடவும் ஆண்களோடு உடல் உறவு கொள்வதற்கே ஆசைபட்டார்கள். ஹசர் தினாரின் [...]
Filed under கதைகள் · Tagged with EssRaa, Kaalam, Kalam, S Ramakrishnan, SRaa, எஸ்.ராமகிருஷ்ணன், காலம், சிறுகதை