பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 672 views and No Comments

எஸ் ராமகிருஷ்ணன் – உயிர்மை இதழில் வெளியானது இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெளியான என்னுடைய இந்த கதையை வாசிப்பதற்கு தேடுவதாக அமெரிக்காவில் இருந்து சிவசங்கரன் என்ற நண்பர் மின்னஞ்சல் அனுப்பி கேட்டிருந்தார். இது போன்று கடந்த நாலு மாதங்களில் ஆறேழு நண்பர்கள் இக்கதையை வாசிப்பதற்காக கேட்டிருந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி இக் கதையை மறுபிரசுரம் செய்திருக்கிறேன். ** ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். [...]

  • Share/Bookmark
அப்பா புகைக்கிறார்
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 298 views and No Comments

தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை. மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது. இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு [...]

  • Share/Bookmark
ஹசர் தினார்
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 309 views and No Comments

காலம் இதழில் வெளியான சிறுகதை அவனுக்குப் பெயர் கிடையாது.அவனை விலைக்கு வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவனது பெயர் மாறிக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவனை விலைக்கு வாங்கிய வணிகன் ஆயிரம் தினார் விலை கொடுத்து வாங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனை ஹசர் தினார் என்று அழைக்கத் துவங்கினார்கள். அந்த வணிகனிடம் அவனைப் போல இருபதுக்கும் மேற்பட்ட இளவயது ஆண்களிருந்தார்கள்.தேசம் முழுவதுமே ஆண் மோகம் கொண்டவர்கள் அதிகமாகியிருந்தார்கள்.அழகான பெண்களை அடைவதை விடவும் ஆண்களோடு உடல் உறவு கொள்வதற்கே ஆசைபட்டார்கள். ஹசர் தினாரின் [...]

  • Share/Bookmark
எல்லா நாட்களையும் போல
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 166 views and No Comments

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு சிறிய தவறு அது. காலையில் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற அலுவலக பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இவ்வளவிற்கும் பணத்தை செலுத்துவதற்கு துணையாக என்னோடு பழனியப்பனும் வந்திருந்தான். எப்போதும் போலவே வங்கியின் வாசல் வரை ஒன்றாக வந்தோம். அப்போது பழனியப்பனின் செல்போன் அடித்தது. அவன் இரைச்சல் சப்தத்தை விட்டு ஒரமாக நின்று பேச துவங்கினான். கையில் பணப்பையை வைத்து கொண்டு நான் எப்போதும் போலவே கண்ணாடி கதவை திறந்து வங்கியின் உள்ளே நுழைந்தேன். வாசலையொட்டி நின்றிருந்த நடுத்தர [...]

  • Share/Bookmark
காட்சிக் கூண்டு
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 196 views and No Comments

மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள் நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது. ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். [...]

  • Share/Bookmark
பிழை திருத்துபவரின் மனைவி
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 256 views and No Comments

அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை. காகிதங்கள் கிழிக்கபடும் போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் [...]

  • Share/Bookmark
விசித்ரி
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 410 views and No Comments

S Ramakrishnan விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை. அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் வெயிலேறி கத்திக் [...]

  • Share/Bookmark
எரிந்த கூந்தல்: எஸ். ராமகிருஷ்ணன்
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 215 views and No Comments

கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழில் வெளியான சிறுகதை. கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம நடந்தா எப்படி.. அதான் காது எழவு கேட்கமாட்டேங்குது. கண்ணு வேற அவிஞ்சி போச்சி. வீட்ல கிடக்க வேண்டியது தானே. இன்னும் அப்படி என்னதான் அந்த பொட்டக்காட்டிலே இருக்கோ… எங்கயாவது வழியில விழுந்து செத்துப் போனா.. தூக்கிட்டு வந்து போடுறதுக்கு கூட வீட்ல நாலு ஆளு கிடையாது பாத்துகோங்க. [...]

  • Share/Bookmark
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 15 September 2009
Stats: 297 views and No Comments

இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன என்பதை, கடந்த மூன்றாண்டுகளாகவே நான் அறியத் துவங்கியிருக்கிறேன். முன்பு கடற்கரையைக் கடந்து செல்கையில் எப்போதாவது பறவைகள் கடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் மீதான என் கவனம் கூடியதில்லை. ஆனால் இந்த மூன்றாண்டிற்குள் நகரில் எங்கெங்கும் எந்த வகைப் பறவைகள் வந்து அடைகின்றன. அதன் குரல் எப்படியிருக்கும். எந்தத் திசையில் அவை பறந்து போகின்றன என்பதைக் கவனமாக அறிந்திருக்கிறேன். என்னை இயங்க வைத்துக்கொண்டிருப்பது இந்தப் பறவைகள்தான். பறவை என்பது எனக்கு வெறும்காட்சிப் [...]

  • Share/Bookmark