Posted in கதைகள் on 10 September 2009
Stats: 1,198 views and No Comments
கலி முற்றிய காலத்தில், மனுஷத்தனம் மரித்துவிட்ட சென்னைப் பட்டணத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தில் என்னை உத்தியோகம் பார்க்க விதித்து அனுப்பி வைத்தான் எம்பெருமான். பத்தாங்கிளாஸ் படித்தவள் என்பது தெரிந்தால் பெருக்கித் துடைக்கச் சொல்ல அனேகமாக யார் மனமும் இடம் கொடுக்காது என்பது என் அனுபவ ஆசான் போதித்த பாடமாகையால், பணியாற்றப் போகுமிடங்களில் நான் என் கல்வித் தகுதி குறித்து ஒருபோதும் பிரஸ்தாபிப்பதில்லை. அப்படியே துருவித் துருவி கேட்கும் சில ஜீவராசிகளும் உண்டு இவ்வுலகில். அச்சமயங்களில் வழக்கமான வேலைக்காரச் [...]
Posted in கதைகள் on 28 August 2009
Stats: 255 views and No Comments
பல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு காலடியில் பூமி நழுவியது. முகத்தில் லேசாய் கலவரம் விரிந்தது. தியாகராயா ரோட்டில் எச்.எஸ்.பி.ஸி ஏடிஎம்-ல் பணம் எடுக்க நின்றிருந்தபோது “ஹாய்” என்று திடீரென்று எதிரே வந்து நிற்கிறான். இத்தனை காலம் எங்கிருந்தான் இவன்? ஆரம்பத் தயக்கங்கள் தாண்டி இருவரும் இயல்புக்கு வருவதற்கே சில கணங்கள் ஆயின. இருவருக்கும் சட் சட்டென்று பழைய நினைவுகள் முகத்தில் வெளிச்சமிட்டதை [...]
Posted in கதைகள், சிறுகதைப் போட்டி on 27 August 2009
Stats: 687 views and No Comments
ஈச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை டவுசரை அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கொண்டு, வட்டமான தட்டைக் கூடையைத் தோளில் தூக்கிக் கொள்ளுவான். கேட் சாத்தியதால் தங்கி விட்ட பஸ்ஸில் ஒரு வீரனைப் போலப் பாய்வான். ” கல்லே..கல்லே.. வேர்க்கல்லே. “ ” உச்சி வெய்யிலுக்கு எப்படி வேர்த்து வடியுது. வேர்க்கல்லேங்கறியே தம்பி! ” – சில பேர் ஜோக் மட்டும் அடிப்பார்கள். வேர்க்கடலை [...]