உலக முடிவு வரை – தாமஸ் ஜோசப்
By சாரு நிவேதிதா
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 278 views and No Comments

சாரு நிவேதிதா குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை பாரீசிலுள்ள சார்ள்ஸ் டி கால் விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பினார்கள்.இதற்குப் பிறகு சில வருடங்கள் கடந்து போயின.அவனுடைய சூட்கேஸ் பழையதாகிப் பிய்ந்தது.எல்லா இரவுகளிலும் முதலாவது டெர்மினலிருக்கும் தளத்தில் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பெஞ்சில் அவன் தூங்குகிறான்.வினோதச் [...]

  • Share/Bookmark
கையருகே ஆகாயம்
By சாரு நிவேதிதா
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 731 views and No Comments

தினமலர் – வாரமலர் :: சாரு நிவேதிதா ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார். எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா [...]

  • Share/Bookmark
என் முதல் ஆங்கிலக் கடிதம்
By சாரு நிவேதிதா
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 538 views and No Comments

தினமலர் – கதை மலர் ( செப்டம்பர் 1993 ) :: சாரு நிவேதிதா பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் அவன் என்னை அழைத்திருந்ததால் நானும் அதில் பங்கு [...]

  • Share/Bookmark
வெளியிலிருந்து வந்தவன்
By சாரு நிவேதிதா
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 295 views and No Comments

அம்பலம் இணையதளம் :: சாரு நிவேதிதா இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில் இருந்தான் அவன். மது , மாது , சூது என்ற மூன்று தீமைகளில் ( ?) கடைசி இரண்டைப் பற்றியும் எங்களுக்குள் [...]

  • Share/Bookmark
அவ்வா
By சாரு நிவேதிதா
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 896 views and No Comments

ஆறாம்தினை இணையம் :: சாரு நிவேதிதா ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது. அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் குட்டி வாலும் நீண்டு மெலிந்த உடலும் கொண்ட டாபர்மேன் வகை நாய்கள் கூட தெருவில் கேட்பாரற்று அலைந்து கொண்டிருக்கும். எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் [...]

  • Share/Bookmark
பாக்தாத் பேரழகி அல்லது இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி?
By சாரு நிவேதிதா
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 1,212 views and 1 Comment

உயிரோசை இணையதளம் :: சாரு நிவேதிதா “ நீங்கள் ஏன் இப்போதெல்லாம் சிறுகதையே எழுதுவதில்லை ?” நண்பர்களிடமிருந்து அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி இது. ‘ இது என்ன முட்டாள்தனமான கேள்வி ?’ என்று மனதில் தோன்றும். ஆனால் மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியே சொல்லி விடுகிறோமா என்ன ? ராஸ லீலாவில் வரும் நூறு அத்தியாயங்களையும் நூறு சிறுகதைகளாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே ? சிறுகதை என்று தனியாக ஒன்றை எழுத வேண்டுமா என்ன ? மேலும் [...]

  • Share/Bookmark
கோடம்பாக்கம்: Charu Nivethitha
By சாரு நிவேதிதா
Posted in கதைகள் on 15 September 2009
Stats: 1,059 views and No Comments

சாரு நிவேதிதா :: ஆனந்தவிகடன் ஹாலிவுட் படங்களைக் கொஞ்சம் உல்டா பண்ணி தமிழ் மக்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவது கோடம்பாக்கத்து வழக்கங்களில் ஒன்று. அதன்படி, பிரபல எழுத்தாளன் கச்சிராயனைச் சந்தித்த சிரஞ்சீவி என்ற ஓர் இளம் தயாரிப்பாளர், அவன் கையில் ஒரு டி.வி.டி-யைக் கொடுத்து “இதுதான் என் அடுத்த படம். இதற்கு நீங்கள்தான் வசனம்” என்று சொன்னார். சிரஞ்சீவி பற்றி அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். அவர் இதற்கு முன் தயாரித்த இரண்டு படங்களுமே ஓரளவுக்கு வசூல் கொடுத்தவை. [...]

  • Share/Bookmark