காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
By ரா.கிரிதரன்
Posted in கதைகள், நவீன இலக்கியம் on 18 December 2009
Stats: 421 views and No Comments

இது ஆலிவர் மெஸ்ஸையன் (Olivier Messiaen) ஜெர்மன் சிறையில் எழுதிய Quartet for the end of time என்ற இசைத் தொகுப்பை மையமாகக் கொண்டு எழுதிய சிறுகதை * இடம்: ஸ்டாலாக்-8, ஜெர்மனி, சிறை எண்: 26. 1942 ஜனவரி மாத இரவு. அந்த நீளமான அறையில் பொதி மூட்டைகள் போல மக்கள் கூட்டமாய் படுத்துக்கொண்டிருந்தனர். கனத்த திரைச் சீலைகளுக்கு மேல் விளக்குகள் காற்றில் ஆடியபடி வெளிச்சத்தை சீராக செலுத்த முயற்சி செய்துகொண்டிருந்தன. இருளும் வெளிச்சமும் [...]

  • Share/Bookmark
புலன்வெளி ஒலிகள்
By ரா.கிரிதரன்
Posted in கதைகள், சிறுகதைப் போட்டி on 28 September 2009
Stats: 340 views and No Comments

- ரா.கிரிதரன் சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என் காலடி சத்தத்தின் இடையே உருவான நிசப்தம் பயத்தை உண்டாக்கியது. இப்போது பைத்தியங்கள் , குடிகாரர்கள் இவர்களை மட்டுமே இத்தெரு எதிர்ப்பார்த்திருக்கும். சமயத்தில் என்னைப்போல் வீடுள்ளவர்களுக்கும் அனுமதியுண்டு. சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் – `உங்களுக்கு நாலு தலை` – ஜெயந்தி நீண்ட நேர மெளனத்தை நிரப்பினாள். அரைமணி நேரமாய் எதுவும் பேசாமல் [...]

  • Share/Bookmark
குரு பெயர்ச்சி
By
Posted in கதைகள் on 24 September 2009
Stats: 605 views and No Comments

காஃபி மேக்கரில் கோப்பையை நிறைக்கும்போது ஃப்ளாஸ்ஸி பின்னாலிருந்து முழங்கையை சுரண்டினாள். ‘எப்படிப் போயிட்டிருக்கு ரோசெஸ்டர் பிராஜெக்ட்?’ இன்றைய தேதியில் கம்பெனி முழுவதும் இந்த பிராஜெக்டைப் பற்றித்தான் பேச்சு. மின்னசோட்டா அரசின் சிவப்பு நாடா பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சம் புலம்பிவிட்டு வெண்டைக்காய் வழவழப்போடு ‘50-50 சான்ஸில் ப்ராஜெக்டை வென்று விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். மேசை மேல் டிரேக் (Drek) ’Product Manager – Rochester Project’ என்ற குறிப்போடு கூடவே ’இராமநாதன் தணிகாசலம்’ தலைப்போடு ரெஸ்யூம் ஒன்றையும் [...]

  • Share/Bookmark
ஹசர் தினார்
By எஸ். ராமகிருஷ்ணன்
Posted in கதைகள் on 22 September 2009
Stats: 309 views and No Comments

காலம் இதழில் வெளியான சிறுகதை அவனுக்குப் பெயர் கிடையாது.அவனை விலைக்கு வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவனது பெயர் மாறிக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவனை விலைக்கு வாங்கிய வணிகன் ஆயிரம் தினார் விலை கொடுத்து வாங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனை ஹசர் தினார் என்று அழைக்கத் துவங்கினார்கள். அந்த வணிகனிடம் அவனைப் போல இருபதுக்கும் மேற்பட்ட இளவயது ஆண்களிருந்தார்கள்.தேசம் முழுவதுமே ஆண் மோகம் கொண்டவர்கள் அதிகமாகியிருந்தார்கள்.அழகான பெண்களை அடைவதை விடவும் ஆண்களோடு உடல் உறவு கொள்வதற்கே ஆசைபட்டார்கள். ஹசர் தினாரின் [...]

  • Share/Bookmark