பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்
- எஸ். ராமகிருஷ்ணன் | September 22, 2009 · 6 Comments
எஸ் ராமகிருஷ்ணன் – உயிர்மை இதழில் வெளியானது இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெளியான என்னுடைய இந்த கதையை வாசிப்பதற்கு தேடுவதாக அமெரிக்காவில் இருந்து சிவசங்கரன் என்ற நண்பர் மின்னஞ்சல் அனுப்பி கேட்டிருந்தார். இது போன்று கடந்த நாலு மாதங்களில் ஆறேழு நண்பர்கள் இக்கதையை வாசிப்பதற்காக கேட்டிருந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி இக் கதையை மறுபிரசுரம் செய்திருக்கிறேன். ** ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். [...]
Filed under கதைகள் · Tagged with Classics, EssRa, Fiction, Ramakrishnan, Shorts, SR, Story, Tamil Stories, எஸ்.ராமகிருஷ்ணன்
அப்பா புகைக்கிறார்
- எஸ். ராமகிருஷ்ணன் | September 22, 2009 · 1 Comment
தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை. மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது. இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு [...]
Filed under கதைகள் · Tagged with EssRaa, S Ramakrishnan, SR, SRa, எஸ்.ராமகிருஷ்ணன்
காட்சிக் கூண்டு
- எஸ். ராமகிருஷ்ணன் | September 22, 2009 · Leave a Comment
மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள் நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது. ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். [...]
Filed under கதைகள் · Tagged with Experiences, Incidents, Life, S Rama Krishnan, Short, SR, Tamil Stories, எஸ்.ராமகிருஷ்ணன்
எரிந்த கூந்தல்: எஸ். ராமகிருஷ்ணன்
- எஸ். ராமகிருஷ்ணன் | September 22, 2009 · Leave a Comment
கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழில் வெளியான சிறுகதை. கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம நடந்தா எப்படி.. அதான் காது எழவு கேட்கமாட்டேங்குது. கண்ணு வேற அவிஞ்சி போச்சி. வீட்ல கிடக்க வேண்டியது தானே. இன்னும் அப்படி என்னதான் அந்த பொட்டக்காட்டிலே இருக்கோ… எங்கயாவது வழியில விழுந்து செத்துப் போனா.. தூக்கிட்டு வந்து போடுறதுக்கு கூட வீட்ல நாலு ஆளு கிடையாது பாத்துகோங்க. [...]