சோம்பேறி கழுதை || Tamil story

               சோம்பேறி கழுதை

Tamil story


   ஒரு ஊரில் ஒரு சலவை தொழிலாளி தன் தொழிலுக்காக ஒரு கழுதை வளர்த்து வந்தார். அந்த கழுதைக்கு வேளா வேலைக்கு உணவு கொடுத்து தான் துவைக்கும் துணியை எடுத்து செல்ல பயன்படுத்தி வந்தான்.

   சோம்பேறியான அந்த கழுதைக்கு பொதி சுமப்பது பிடிக்கவில்லை அடிக்கடி ஏமாற்றி வந்தது அப்படி ஏமாற்றி வந்த அந்த கழுதை ஒரு நாள் தப்பித்து காட்டிற்கு ஓடி விட்டது.

   அப்படி ஓடிய அந்த கழுதை காட்டில் ஒரு இடத்தில் அதிகமாக இருந்த புல்வெளியில் புல்லை மேய்ந்து விட்டு வயிரு அதிகமானதும் கத்த ஆரம்பித்தது.

Foolish lion click here

   இதன் சத்தத்தை கேட்ட சிங்கம் இதுவரை கேட்காத சத்தமாக இருக்கின்றது ஏதோ புதிய நம்மை விட பலம் கொண்ட மிருகம் வந்துவிட்டது என நினைத்து ஓடி மறைந்து கொண்டது.

Tamil story

   சிங்கம் வெளியில்லராமல் மறைந்து இருப்பதை பார்த்த நரி அதற்கான காரணத்தை கேட்டது. அதற்கு சிங்கம் நடந்தவற்றை கூறியது . உடனே நரி சிங்கத்தை அழைத்துக் கொண்டு சத்தம் கேட்கும் திசையை நோக்கி சென்றது.

   இடத்தை நெருங்கியதும் மீண்டும் அந்த சத்தம் கேட்டது சிங்கம் மறுபடியும் ஓடியது. நரி சமாதான படுத்தி அழைத்து வந்தது, அருகில் வந்து பார்த்தால் அது கழுதை என்று நரி சொன்னது தான் தாமதம் சிங்கம் உடனே அந்த கழுதையை கொன்று விட்டது.
Previous
Next Post »

No comments:

Post a Comment