FOOLISH LION

               சிங்கத்தின் ஏமாற்றம்

    ஓர் அடர்ந்த காட்டில் சிங்கராஜா ஒன்று அந்த பகுதியில் வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு காலகட்டத்தில் சிங்கராஜாவிந்து வயது ஆகிவிட்ட காரணத்தால் அதனால் வேட்டையாட முடியவில்ல. அதற்காக அது ஒரு யோசனை செய்தது.



     காட்டில் இருக்கும் மிருகங்கள் அனைத்தையும் கூட்டி அனைத்து மிருகங்களிடமும் எனக்கு வயது ஆகிவிட்டது, என்னால் இனி வேட்டையாட முடியாது, அதனால் நீங்கள் ஒவ்ஒருவராக ஒவ்வொரு நாளைக்கு எனக்கு உணவாக வேண்டும். இதுதான் அதன் யோசனை.

   தான் நினைத்தபடியே நிறைவேற்றியும் விட்டது சிங்கம். காட்டுக்கு ராஜா என்பதால் மற்ற விலங்குகளும் ஒன்றும் பேசமுடியாமல் ஏற்றுக்கொண்டன.

   பேசியபடியே ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு விலங்காக சிங்கத்திற்கு இறையாகின. ஒரு நாள் நரியின் முறை வந்தது அந்த நரி இன்று நாம் சிங்கத்திற்கு உணவாக போகிறோமே!!என்ற வருத்தத்தில் சோகமாகவே இருந்தது.

   தாயின் சோகத்திற்கு காரணம் கேட்டது பிள்ளை. தாய் தன் சோகத்தை கூறியது உடேனே பிள்ளை நரி நீ கவலைபடாேதே நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு தாயிடம் விடைெற்று கொண்டு கிளம்பியது.

   நேராக சிங்கத்திடம் செல்லாமல் நரி அந்த காட்டை இரண்டு முறை சுற்றியது, அதன்பிறகு சிங்கத்திடம் மூச்சு இறைக்க இறைக்க சென்று நின்றது.



   சிங்கம் கடும் கோபத்துடன் நரியை பார்த்து ஏன் இவ்வளவு தாமதம்? என்று கேட்டு முறைத்தது. நரி ஒரே படபடப்புடன் என்னை மன்னித்து விடுங்கள் சிங்கராஜாவே நான் தங்களுக்கு இறையாகத்தான் வந்து கொண்டு இருந்தேன் வரும் வழியில் தங்கைளை போலேவே ஒரு சிங்கம் என்னை துறத்தியது அதனிடம் இருந்து தப்பித்து வருவதற்குதான் இவ்வளவு தாமதம் என்று கூறியது!

ரோஜாவின் தலைகனம் click here

    உடனே சிங்கம் யார் அது எனக்குப் போட்டியாக வந்து காட்டு என்னிடம் என்று கூறி நரியை கூப்பிட்டது. தன் திட்டம் நிறைவேறிவிட்டதை என்னிய நரி சிங்கத்தை அழைத்துக் கொண்டு காட்டை இரண்டு முறை சுற்றியது.

   பின் ஒரு கிணற்றின் உள்ளே சிங்கத்தை அழைத்து காட்டி இதோ இங்குதான் அது மறைந்து இருக்கிறது என்றது. உடன சிங்கம் கிணற்றை எட்டி பார்ந்தது சிங்கத்தின் பிம்பம் தெறிந்தது. பிம்பத்தை தன் எதிரி என்று நினைத்து கர்ஜித்தது அதன் எதிரொலி கேட்டதுதான் தாமதம் முட்டாள் சிங்கம் கிணற்றில் குதித்து உயிரைவிட்டது.



   நரியின் தந்திரம் ஜெயித்துவிட்டது. அனைத்து விலங்குகளும் நரியை தூக்கி வைத்து கொண்டாடின. அதன்பிறகு அனைத்து விலங்குகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தன.
Previous
Next Post »

No comments:

Post a Comment