Tamil stories for kids | பேராசை பண்ணையார்

                 பேராசை பண்ணையார்

https://www.tamilstory.in/?m=1


   ஒரு ஊரில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார் அவருக்கு ஊரில் அனைவரும் பயந்து வாழ்ந்து வந்தனர். ஊரில் அனைவரும் அவரவர் வீட்டில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருளை பண்ணையார் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்பது பண்ணையாரின் கட்டுப்பாடு. பண்ணையார் வீட்டில் ஒரு கொடுரமான வேலைக்காரன் ஒருவன் இருந்தான் அவன் மிகவும் மோசமானவன்.

ஆமையும் கொக்கும் click here

    பண்ணணயாருக்கு ஒரு மகன் இருந்தான் அவனுக்கு ஒரு நாள் திருமணம் வெகு விமர்சயாக நடத்தப்பட்டது. சில நாட்கள் நகர்ந்தன். பண்ணையார் மருமகள் கருவுற்றாள். அவளின் வளைகாப்பு நடத்த முடிவடுக்கப்பட்டது. பண்ணையார் ஊரில் அதிக அந்தஸ்து உடையவர் என்பதால் அவருடைய வலையல்காப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்பட்டது.

https://www.tamilstory.in/?m=1


    வளையல்காப்பு நிகழ்ச்சிக்கு நிறைய சீர்வரிசைகள் வண்டி வண்டி யாக வந்தன. அதனை ஊர் மக்கள் அனைவரும் பார்த்து வியந்தனர். உலகத்தில் உள்ள அத்தனை விதமான பழங்களும் சீர்வரிசையில் வந்தன.

    இந்த மக்களுடன் அதே ஊரை சேர்ந்த  சொக்கனும் ஒருவன்.சொக்கன் மிகவும் ஏழமை நிலையில் தன் மனைவியை இழந்து தன் இரண்டு பிள்ளைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்தான். தன் இரண்டு பிள்ளைகளுடன் வளையல்காப்பு நடைபெறும் நிகழ்ச்சியை பார்த்து விட்டு மன கவலையுடன் வீடு திரும்பினர். 

Moral story click here

   அங்கு பணக்காரர்களை மட்டும் அழைத்து உணவு அளித்தனர். ஏழை மக்களுக்கு உணவு அளிக்கவில்லை. அன்று இரவு செக்கன் வீட்டில் படுத்து உறங்க சென்றான். சொக்கன் பிள்ளைகள் வளையல்காப்பு நிகழ்ச்சி பற்றி பேசியபடி உறங்க பேகும் முன்பு அங்கு வளையல்காப்பு நிகழ்ச்சியில் அளித்த உணவு எவ்வாறு இருந்திருக்கும் அந்தப் பழங்கள் எத்தனை விதவிதமாக இருந்தன அதிலும் அந்த செவ்வாழை மிகவும் அழகாக சிகப்பு நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகு சொல்ல வார்த்தையே இல்லை அவ்வலவு அழகாக இருந்தது. அதன் சுவை எவ்வாறு இருந்திருக்கும் நினைக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது. என்று பேசியபடியே உறங்கினர். இதனை கேட்டப்படியே படுத்து இருந்த செக்கன் நமது வசதிக் எகல்லாம் அந்த பழத்தை வாங்கி உன்ன முடியுமா என்று நினைத்துப் படியே உறங்கினான்.

https://www.tamilstory.in/?m=1


   இரண்டு நாட்கள் சென்றன சொக்கன் சந்தைக்கு சென்றான் அங்கு செவ்வாழை கன்று ஒருவர் விற்றார். அதில் ஒரு கன்று இரண்டு வராகன் கொடுத்து வாங்கி வந்தார் தன் வீட்டுத் தோட்டத்தில் பதியப் போட்டார் ஒரிரு வாரங்கள் சென்றன செவ்வாழை மிகவும் அழகாக வளர்ந்து வந்தனர்.சொக்கன் மகள்கள் ஒவ்வொரு நாள் எழும் பொழுது அந்த வாழைகன்றை பார்த்துத்தான் விழிப்பார்கள். அத்துனை மகிழ்ச்சி அவர்களுக்கு.

   எங்கள் வீட்டில் செவ்வாழைமரம் உள்ளது அது காய்த்த உடன் நாங்கள் நிறைய சாப்பிட போகிறோம் என்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தனர். செவ்வாழையும் பூ பூக்க தொடங்கியது, சொக்கன் மகள்கள் சந்தோஷத்துக்கு எல்லையில்லாமல் இருந்தனர்.

https://www.tamilstory.in/?m=1


    செவ்வாழை காய்த்து பழுக்கும் நிலையில் இருந்தது. ஒரு நாள் பண்ணையார் வீட்டு வேலைக்காரன் சொக்கன் வீட்டுக்கு வந்தான். சொக்கனை பண்ணையார் வீட்டு வேலைக்கு அழைத்து செல்ல வந்தவன் சொக்கன் வீட்டு வாழையை பார்த்து விட்டான். அவனுக்கு ஒரே வியப்பு என்னடா இது சொக்கன் வீட்டில் செவ்வாழை, எப்படியும் இவர்களை இதனை சாப்பிட விடக்கூடாது என்று முடிவு கட்டினான்.

   பண்ணையாரிடம் இதை சொல்லியே ஆக வேண்டும் என்று என்னியபடியே சொக்கனை அங்கிருந்து அழைத்து சென்றான். வீட்டு வேலையை முடித்த பின் சொக்கன் வீட்டில் இருக்கும் செவ்வாழையை பற்றி வேலைக்காரன் பண்ணையாரிடம் பகிர்ந்தான். 

https://www.tamilstory.in/?m=1


   பண்ணையர் சொக்கனை அழைத்து உன் வீட்டில் செல்வாழை இருக்கிறதாமே அப்படியா என்று கேட்டார்.ஆமாம் ஐய்யா என்றான் சொக்கன். நாளைக்கு நம்ம வீட்டு வேலைக்காரன் வருவான் அதை வெட்டி கொடு சரியா, குழந்தை பிறந்த தாய்க்கு செவ்வாழைப்பழம் கொடுப்பது மிகவும் நல்லது அதனால நீ உன் வீட்டில் இருக்கும் செவ்வாழையை வெட்டி அதனை என் மருமகளுக்கு கொடு என்றார்.

   செக்கன் மிகவும் வருத்தத்துடன் வீட்டிற்கு சென்று அமர்ந்து இருந்தான். மறுநாள் காலையிலேயே பண்ணையார் வீட்டு வேலைக்காரன் வந்தான் வாழை தாரை வெட்டி தூக்கிச் சென்று விட்டான். சொக்கன் மக்கள் இருவரும் அந்த காட்சியை பார்த்தப்படியே தங்கள் கனவுகள் அனைத்தும் வீனாகி விட்டதே என்ற ஏக்கத்தில் அழுத வண்ணம் நின்றனர்.

Kids story click here

    சொக்கன் பிள்ளைகளை பார்த்து கவலை பட வேண்டாம். இன்னும் இரண்டு குருத்து வளர்ந்து வருகிறது அது காய்க்கும் நீங்கள் தான் அதனை சாப்பிட போகிறீர்கள் கவலை பட வேண்டாம். என்று கூறி சமாதானப் படுத்தினார் பிள்ளைகளும் மனதை தேத்திக் கொண்டனர் .குறுத்து வளரத் தொடங்கின. ஆடு ஒன்று குறுத்தை கடித்து தின்றன. பிள்ளைகள் பாவம் மறுபடியும் சோர்ந்து போனர். 

https://www.tamilstory.in/?m=1


   மேலும் உள்ள ஒரு குருத்தை பத்திரமாக பாதுகாத்து வளர்த்து வந்தனர் சொக்கனின் மகள்கள். அந்த வாழை காய்த்து பழம் பழுத்ததும் மகிழ்ச்சியாக செல்வாழை பழத்தை உண்டு மகிழ்ந்தனர்.


என்றும் அன்புடன்

சுப்ரமணிய சங்கர்.

Previous
Next Post »

No comments:

Post a Comment