Moral stories , Tamil story

        நாம் எப்படி இருக்க வேண்டும்

Tamil kathigal


   ஒரு காட்டில் வாழ்து கொண்டிருந்த நரி ஒன்று அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பே எழுந்து உணவு தேடி மேற்கு நோக்கி சென்றது.

   சிறிது நேரத்தில் கிழக்கில் இருந்து சூரியன் எழுந்து வந்தது சூரியன் நரியின் மேல் படும் பொழுது அதன் நிழல் நீண்டதாகவும் மிகவும் பிரமாண்டமாகவும் தெரிந்தது.

சோம்பேறி கழுதை click here

   இதை பார்த்த நரி நாம் இவ்வளவு பெரியவனாக இருக்கின்றோம் நமக்கு சின்னதாக இருக்கும் உணவு பத்தாது நமக்கு யானை, ஒட்டகம் போன்ற பெரிய விலங்கு தான் வேண்டும் என்று கம்பீரமாக நடை போட்டுக் கொண்டு வெகுதூரம் நடந்தது.

Tamil kathigal


   இப்படியே உணவு ஏதும் கிடைக்காமல் நீண்ட நேரம் நடந்ததால் உடல் சோர்வு அடைந்து விட்டது. அதே சமயத்தில் மதிய வேலையும் வந்துவிட்டது சூரியன் உச்சிக்கு வந்து விட்டான்.

   நரி தனது நிழலை பார்த்தது நிழல் சுருங்கி மிக சிறியதாக இருந்தது. திடுக்கிட்ட நரி அதற்குள் உணவின்றி நாம் இவ்வளவு சிறியதாக ஆகிவிட்டோமே என்று மனம் நொந்து தற்போதய சூழ்நிலைக்கு ஏதாவது புறா போன்ற சிறிய உணவு கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

Tamil kathigal


   இந்த நரியை போல தான் நாமும் நம்மை மிகைபடுத்திக் கொண்டு பெரியதாக நினைத்து வாழ்வில் பல அடிகள் பட்டு திருந்திய பிறகு தான் தெரிகின்றது நாம் எப்படி பட்டவர் என்று . அந்த நரியை போல இல்லாமல் அடக்கமாக வாழ்து சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும்.
Previous
Next Post »

No comments:

Post a Comment