பாம்பும் முனிவரும்|| Stories for kids || Tamil story

                 பாம்பும் முனிவரும்


   ஒரு ஊரின் ஒதுக்குபுறத்தில் உள்ள ஒரு புற்றில் பாம்பு ஒன்று வசித்து வந்தது அந்த பாம்பானது அந்த வழியாக வரும் அனைவரையும் விரட்டி பயமுருத்தி வைத்திருந்தது. அதனால் அந்த வழியாக மக்கள் வரும் பொழுது அனைவரும் ஒரு பயத்துடனேயே வருவார்கள்.

   ஒரு நாள் ஒரு சிறுவன் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான் அந்த பாம்பு சிறுவனை பயமுருத்தியது. சிறுவன் பயத்தில் ஓடி விழுந்து எழுந்திருக்கும் பொழுது அவனின் கை ஒடிந்து விட்டது. அந்த அளவிற்கு அந்த பாம்பு அங்கு இருப்பவர்களை பயத்தில் வைத்திருந்தது.



   ஒரு நாள் ஒரு சாது ஒருவர் அந்த வழியாக வந்தார் அவரையும் அந்த பாம்பு விடவில்லை. ஆனால் அந்த சாது பாம்பிடம் சுதாரித்துக் கொண்டு அதனிடம் பேச தொடங்கினார். நீ ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறாய் இப்படி இருந்தால் உனக்கு எப்படி மோட்சம் கிடைக்கும் இனி இந்த மாதிரியான பாவசெயல்களில் ஈடுபடாதே என்று கூறி அந்த பாம்பிற்கு தீட்சை அளித்து விட்டு சென்றார்.

   அன்றிலிருந்து அந்த பாம்பு யாரையும் தொந்தரவு செய்யவில்லை. இப்படி இருக்கும் பொழுது அது புற்றை விட்டு உணவு தேடி வெளயில் வரும் பொழுதெல்லாம் அங்கு அருகில் விளையாடி கொண்டிருக்கும் சிறுவர்கள் கல்லால் அடித்துக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அந்த பாம்பு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.

ஒரு முட்டாள் நரியின் கதை click here

   இப்படி இருக்கும் பொழுது அந்த பாம்பிற்கு அடிபட்ட காரணத்தால் அதனால் உணவு தேடவும் செல்ல முடியவில்லை. உடல் சோர்ந்து விட்டது உணவு இல்லாமல் உடலும் மெலிந்துவிட்டது.

   அந்த சாது மீண்டும் ஒரு நாள் அந்த வழியாக வந்தார் அப்போது அந்த பாம்பை கண்டார். உடல் முழுவதும் காயங்களுடன் மிகவும் சோர்ந்து போய் இருந்தது. சாது காரணத்தை கேட்டார் அதற்கு பாம்பு நடந்தவற்றை கூறியது. அதை கேட்டதும் சாது மிகவும் மனம் வருந்தி உன்னை யாரையும் துன்பபடுத்த வேண்டாம் என்று சொன்னேனே தவிர உன்னை துன்புறுத்துபவர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லையே என்று சொன்னார். இதை கேட்டு கொண்டு இருக்கும் பொழுதே பாம்பு இந்து விட்டது.



   பின்பு அந்த சாது அதற்கான சம்பிரதாயங்களை செய்து முடித்தார். பாம்பு சொர்கம் சென்றது.

   என்ன தான் கெட்டவராக இருந்து நல்லவனாக மாறினாலும் நாம் கெட்டவனாக இருக்கும் பொழுது நாம் செய்த பாவ செயல்களுக்கு தகுந்த தண்டனையை வாழும் காலத்திலேயே அனுபவித்து தான் ஆக வேண்டும் அதற்கு இந்த பாம்பு ஒரு உதாரணம். அதனால் வாழும் காலத்திலேயே பிறருக்கு எந்த பாவமும் செய்யாமல் நம்மால் இயன்ற உதவிகளை செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
Previous
Next Post »

No comments:

Post a Comment