Articles in the காதல் கதைகள் Category
மறுமணம்Posted in கதைகள், காதல் கதைகள் on 29 November 2009
Stats: 926 views and No Comments
அவள் போய் விட்டாள் எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, [...]
மதினிமார்கள் கதைPosted in கதைகள், காதல் கதைகள் on 29 November 2009
Stats: 2,297 views and No Comments
உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா. சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி. இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் [...]
Posted in கதைகள், காதல் கதைகள் on 7 November 2009
Stats: 519 views and No Comments
வாசலுக்குப் போய் கையெழுத்து போட்டேன். நியுயார்க்கில் இருந்து என் மகன் எனக்கு இரண்டு ஷர்ட்டுகள் அனுப்பியிருந்தான். அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருவதை ஞாபகம் வைத்திருக்கிறானே என்று சந்தோஷமாக இருந்தது. உள்ளே போனபோது பெல் அடித்தது. மறுபடி வாசலுக்கு வந்தேன். யாருப்பா? என்றேன். ஒரு இளைஞன் நின்றிருந்தான். நல்ல சிவப்பாக நல்ல உயரத்தில் இருந்தான். தலைமயிரின் கறுப்பும் அடர்த்தியும் மிக வசீகரமாக இருந்தன. திருத்தமான முகத்தில் வியர்வையும் டென்ஷனும் இருக்க, உடையில் நவீனத்துவம் பளிச்சிட்டது. சார்…. [...]
Posted in கதைகள், காதல் கதைகள் on 2 November 2009
Stats: 526 views and No Comments
கல்யாணம் என்கிறதே பெண்களின் சமாச்சாரம் என்றுதான் கிரிதரனுக்குத் தோன்றியது. மாலையும் கழுத்துமாய் இப்படி மனம் பொங்கப் பொங்க நிற்கிறதை வாழ்வின் கனவுகளில் ஒன்றாக இந்த ஸ்திரீ பெருமாட்டிகள் வரித்துக் கொள்கிறார்கள். அட, புருஷா… அப்படின்னா உனக்குள் கனவுகள் இல்லையாக்கும்?… எனக் கேலியாடுகிற மனம். ஆ, அவை கனவுகள் அல்ல, எதிர்பார்ப்புகள். பெண்ணின் சிந்தனைகளிலேயே ஓர் அழகு, கனவு உள்கர்ப்பம் கொண்டிருக்கிற… ஒரு வேளை பெண்ணுக்குள்ளும் ஆணைப் பற்றி இதே தினுசில் யோசனை இருக்கலாம்! வாழ்க்கையில் விநோதங்களுக்குப் பஞ்சமில்லை. [...]
Posted in ஒரு பக்க கதைகள், கதைகள், காதல் கதைகள் on 12 September 2009
Stats: 809 views and 1 Comment
அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு. ” ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான். “ ஏட்டிடம், ” இவன் பாக்கெட்டை சோதனை போடு. ” என்றார் இன்ஸ்பெக்டர். சர்ட் பாக்கெட்டில் ரொனால்ட்ஸ் பேனா. பல்லவன் பஸ் டிக்கட். கசங்கிப் போன ஓர் இன்லேண்ட் லெட்டர். அழகான நெளிவுகளோடு நீல இங்க் எழுத்துக்கள். ” லெட்டரைப் படி. “ ” அன்புள்ள [...]