பாக்கி
- அசோகமித்ரன் | December 26, 2010 · 17 Comments
போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி. நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், 'என்னாங்க என்னாஙக ' ' என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன். சுந்தரி அருகில் வந்து, 'ரெண்டு நிமிஷம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போங்க ', என்றாள். நான் அவளைப் [...]
Filed under கதைகள் · Tagged with
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
- ரா.கிரிதரன் | December 18, 2009 · 3 Comments
இது ஆலிவர் மெஸ்ஸையன் (Olivier Messiaen) ஜெர்மன் சிறையில் எழுதிய Quartet for the end of time என்ற இசைத் தொகுப்பை மையமாகக் கொண்டு எழுதிய சிறுகதை * இடம்: ஸ்டாலாக்-8, ஜெர்மனி, சிறை எண்: 26. 1942 ஜனவரி மாத இரவு. அந்த நீளமான அறையில் பொதி மூட்டைகள் போல மக்கள் கூட்டமாய் படுத்துக்கொண்டிருந்தனர். கனத்த திரைச் சீலைகளுக்கு மேல் விளக்குகள் காற்றில் ஆடியபடி வெளிச்சத்தை சீராக செலுத்த முயற்சி செய்துகொண்டிருந்தன. இருளும் வெளிச்சமும் [...]
Filed under கதைகள், நவீன இலக்கியம் · Tagged with Olivier Messiaen, உண்மைப் புனைவு, சிறுகதை, மேற்கிசைப் புனைவு
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள்
- ரா.கிரிதரன் | December 1, 2009 · 1 Comment
0. இப்போது கனமான பித்தளை கடிகாரம் `நங், நங்` எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும்.அறுபது நிமிடங்களுக்குப்பின் இந்த சளனமற்ற அறையில் வேறுவிதமான உணர்வுகளை மீட்ட வேண்டுமென்ற உறுதியுடன் கடிகாரம் உறங்கச் செல்லும். கடிகாரம் அடங்கிய பின் எழுதுவதைத் துவங்கினேன். `மனிதனுக்கு எத்தனை கர்வம்? தொள்ளாயிரம் கோடி மக்கள் தன்னைச் [...]
Filed under கதைகள், நவீன இலக்கியம் · Tagged with
மறுமணம்
- விந்தன் | November 29, 2009 · 35 Comments
அவள் போய் விட்டாள் எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, [...]
Filed under கதைகள், காதல் கதைகள் · Tagged with மறுமணம், விந்தன்
எரிமலை வாசல் பூ
- என்.சொக்கன் | November 29, 2009 · 29 Comments
உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, 'ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?' என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை. 'ஸ்பீக்கிங்' என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ? அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, 'வணக்கம் சார், என்னை உங்களுக்கு [...]
Filed under ஒரு பக்க கதைகள், கதைகள் · Tagged with என்.சொக்கன், எரிமலை, தாமரை
உறவு, பந்தம், பாசம்
- மெளனி | November 29, 2009 · 4 Comments
இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு [...]
மதினிமார்கள் கதை
- கோணங்கி | November 29, 2009 · 11 Comments
உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா. சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி. இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் [...]
Filed under கதைகள், காதல் கதைகள் · Tagged with கோணங்கி, மதினிமார்கள் கதை
கிருஷ்ணன் வைத்த வீடு
- வண்ணதாசன் | November 29, 2009 · 2 Comments
கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன். பாப்புலர் டாக்கீஸில் 'தாமரை நெஞ்சம் ' படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் [...]
Filed under கதைகள், நாட்டுடைமை · Tagged with வண்ணதாசன்
மதிப்பு மிகுந்த மலர்
- வல்லிக்கண்ணன் | November 29, 2009 · 14 Comments
மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார். நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன. [...]
Filed under கதைகள், நாட்டுடைமை · Tagged with வல்லிக்கண்ணன்
ஆ ! அய்யோ !
- ஜி. சச்சிதாநந்தம் | November 28, 2009 · 19 Comments
முன்னொரு காலத்தில் மிகப்பெரிய செல்வன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். வேலையாட்களை வருத்தி வேலை வாங்குவான். ஆனால் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவான். செல்வன் மாதத் தொடக்கத்தில் வேலையாளை அமர்த்துவான். பெரியத்தொகையை சம்பளமாகக் கொடுப்பதாக சொல்லுவான். வேலையாள் மகிழ்ச்சியாக வேலையில் சேருவான். மாத இறுதி வரை கடுமையாக உழைப்பான். மாதக் கடைசி நாளன்று செல்வன் வேலையாளை அழைத்து கொஞ்சம் பணம் கொடுப்பான். ''கடைக்குப் போய் ''ஆ'' ''அய்யோ'' வாங்கி வா … வாங்கி வராவிட்டால் உனக்குச் சம்பளம் [...]
Filed under கதைகள், சிறுவர் கதைகள் · Tagged with கஞ்சன், கருமி, சிறுவர் கதைகள்