அறநெறி கதைகள் || Tamil moral story || Tamil story

                    நாய் போன்ற மனது

www.tamilstory.in


    ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம்.

   இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது, அந்த ஊரில் அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்கள். விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லை. நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது.

www.tamilstory.in


    அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்கள். அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டது.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன?? போகிற வழிக்கு ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா? என்று எண்ணி, இன்றிலிருந்து பத்து நாட்களும் விரதமாக இருந்து திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு பன்னி கொண்டது.

Click here

    தினமும் கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்டு கொண்டு வந்தது. அதற்கு இராமேஸ்வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது. விரதத்தில் இருந்ததால் பசி கொடுத்த வைராக்கியம் வேறு இருப்பதால் திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது.

www.tamilstory.in


    திருவிழா பத்தாம் நாள் நிறைவாகி கொடி இறக்கினார்களாம். நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியது முதல் அடி எடுத்த வைத்த பொழுது பின்பக்கத்தில் பொத் என்று ஒரு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் ஆஹா!! என்ன மணம்?என்ன சுவை? நல்ல கறி விருந்தாக இருக்கும் போலிருக்கிறதே!! நிறைய மிச்சம் வைத்து இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான்!!என்று எச்சில் இலையை தூக்கி போட்டவனை வாழ்த்தியபடியே அதில் போய் வாய் வைத்து கொண்டு நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால் இந்த விருந்து கிடைத்திருக்குமா? என்று நினைத்து கொண்டது!!

   இந்த நாய் தான் நம் மனது. நம் மனம் இருக்கிறதே ஆட்டம் போட எதுவும் கிடைக்காத பொழுது ரொம்ப அடக்கமாகவும் சுவாமி மீது பக்தி பன்னுவது போலவும் நம்மை போல புண்ணியசாலி யார் இருக்கிறார்கள்..? என்றும் எண்ணி கொண்டு நல்லவன் போல வேஷம் போடும். ஆனால் தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ! சாமியாவது பூதமாவது! அதுக்குலாம் வயசு இருக்குயா!! இப்பவே ருத்ராட்சம் போட்டுகிட்டு திருநீறு பூசிகிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா வாழ்க்கைய அனுபவிக்கிறது யாருனு? கேட்கும். 

   ஏதாவது கஷ்டம் வந்து விட்டால் கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போதுதான் வரும். இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால் பழையபடி ஆட்டம் போடும்!

இங்கே சொடுக்கவும்

நாம் இது போன்று இல்லாமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து , உறுதியுடன் வாழ வேண்டும்.

என்றும் அன்புடன்

சுப்ரமணிய சங்கர்....

Previous
Next Post »

No comments:

Post a Comment