நகைச்சுவை கதை
ஒரு நாட்டின் அரசன் வித்தியாசமான அறிவிப்பு ஒன்று வெளியிட்டான். ஒரு குளத்தில் நிறைய முதலைகளை விட்டுவிட்டான், அந்த குளத்தின் ஒரு கரையிலிருந்து அடுத்த கரைக்கு யார் நீந்தி வருகின்றார்களோ அவருக்கு ஐநூறு பவுன் தங்க காசு இல்லை என்றால் தனது மகளை திருமணம் செய்து கொள்ளலாம். என்பது தான் அந்த அறிவிப்பு.
அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அந்த குளத்தை சுற்றியும் கூட்டம் வெகுவாக கூடி விட்டது. அனைவரும் சலசலப்புடன் இருந்தனர். திடீரென ஒருவன் அந்த குலத்தில் குதித்து நீந்தி அடுத்த கறையை அடைந்தான்.
அந்த இடத்தில் ஒரு நிசப்தம் நிலவியது சற்று நேரம் .ராஜா அழைத்தார் அனைவரும் கரகோஷத்துடன் வரவேற்றனர். அரசன் முன் வந்து நின்ற அவனை அனைவரும் பாராட்டினர்.
அரசன் கேட்டான் உனக்கு என்ன பரிசு வேண்டும். 500 பவுன் தங்ககாசு வேண்டுமா அல்லது எனது மகள் வேண்டுமா என்றார். அதற்கு அவன் சொன்ன பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.
என்னை யார் தள்ளிவிட்டது என்று எனக்கு தெரிய வேண்டும் என்றான்.
யார் என்று உங்கள் கற்பனையை சொல்லுங்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment